செய்திகள்,விளையாட்டு டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…

டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…

டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!… post thumbnail image
கொல்கத்தா:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் பேட்டி ஒன்றில் கூறியதாவது:– டோனி ஒரு அதிசயமானவர். நான் பார்த்த வகையில் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். மிகவும் முக்கியமான 20 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி உலககோப்பை மற்றும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை டோனி கைப்பற்றி உள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கிரிக்கெட்டுக்காக ஏராளமாக செய்துள்ளது. பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் இங்கு பணிபுரிகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி