விஜய்யுடன் எனக்கு போட்டி இல்லை: நடிகர் விஷால் பேட்டி!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகர் விஷால் நடித்த ‘பூஜை’ படம் திருச்சி கலையரங்கம், எல்.ஏ.(மாரீஸ்) தியேட்டர்களில் ஓடுகிறது. அப்போது ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஷால் தோன்றி பேசினார். முன்னதாக திருச்சியில் நிருபர்களிடம் நடிகர் விஷால் கூறியதாவது –இயக்குனர் ஹரி இயக்கத்தில் நான் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘பூஜை’ படம் எனது சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாகும். தமிழ், தெலுங்கு உள்பட 1200 தியேட்டர்களில் ‘பூஜை’ படம் வெளியாகி மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

எனது தயாரிப்பில் வெளியான இந்த படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு ஸ்டுடியோவில் உட்கார்ந்து கொண்டு நன்றி சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. நேரில் நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக ரசிகர்களை ஊர் ஊராக சென்று சந்தித்து வருகிறேன்.‘பூஜை’ படம் குடும்ப கதையம்சம், சென்டிமெண்ட், நகைச்சுவை, சண்டை, என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். குடும்பம், குடும்பமாக வந்து மக்கள் ரசிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தும் டைரக்டர் ஹரி இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். சரித்திர படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு சாதாரணமான படங்களிலேயே வசனங்களை பேசுவதில் சிரமம் இருக்கும். சரித்திர படங்களில் வசனங்களை பேசுவது அதிக சிரமமாக இருக்கும். அதே போன்று பஞ்ச் டயலாக்குகளை படங்களில் பேசுவது எனக்கு விருப்பம் இல்லை.

நடிகர் விஜய்யுடன் எனக்கு போட்டி இல்லை. ‘பூஜை’ படம் சூட்டிங் தொடங்கிய முன்பே தீபாவளிக்கு தான் ரீலிஸ் என்று தேதியை முடிவு செய்து விட்டு படப்பிடிப்பை தொடங்கினோம். ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று எனக்கு தெரியாது. இது தற்செயலாக நடந்தது. நடிகை லட்சுமிமேனன் என்னுடன் நடிக்க விருப்பம் என்று கூறியிருப்பது மகிழ்ச்சி. அவர் சிறந்த நடிகை. மற்றவர்களை ஊக்கப்படுத்துவார். நடிகர் சங்கத்தை கைப்பற்றும் எண்ணம் எனக்கு கிடையாது. சங்கத்தை சிறப்பான வழியில் நடத்த அனைவரும் முன்னிற்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: