தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!…

விளம்பரங்கள்

மும்பை:-மும்பை முலுந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சர்வந்த் ஜெபால் எனும் நபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றார். அந்த நபர் வீட்டினுள் வந்தபோது தூங்குவது போல நடித்த அப்பெண்ணின் 4 வயது மகள், பின் வீட்டிலிருந்து வெளியே வந்து கதவை பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார்.

சிறுமியின் சமயோசித செயலால் பெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்த முயன்ற நபரை பிடித்த மக்கள், அவரை உடனடியாக காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபர் மீது சட்டப்பிரிவு 354 மற்றும் 452-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும், தற்போது கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பல பெண்களிடம் தகாத முறையில் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: