செய்திகள் 7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!…

7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!…

7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!… post thumbnail image
டெல்லி:-குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வாயில் வழக்கத்திற்கு மாறாக சிறிதும் பெரிதுமாக 202 பற்கள் வளர்ந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பற்களை மிகவும் கவனமாக அகற்றினர்.

சிறுமியின் வாயில் வளர்ந்திருந்த பற்களை அகற்ற பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எலும்பு முறிக்கும் கருவியை பயன்படுத்திய மருத்துவர், இந்த அறுவை சிகிச்சை சுலபமானது என்றாலும் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டிய நிலை இருந்ததால் இரண்டு மணி நேரத்திற்கு சிகிச்சை நடைப்பெற்றதாக தெரிவித்தார்.இது தொடர்பாக கருத்து தெரிவித்த மருத்துவர் அஜோய், பொதுவாக இத்தகைய பற்களின் வளர்ச்சியை காண முடியும். ஆனால், 7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது என்றார்.

சிறுமியின் பிறந்த நாளுக்கு அடுத்த நாள் இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டதால், இது தான் அவளுக்கு கிடைத்த சிறந்த பிறந்த நாள் பரிசு என சிறுமியின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை மேற்கொண்ட சிறுமிக்கு தற்போது திரவ உணவு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில மாதங்களில் அவளால் முன்பு போல உணவு சாப்பிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி