செய்திகள்,திரையுலகம் 2ஜி வசன விவகாரம்: விஜய்,முருகதாஸ் மீது அவதூறு வழக்கு!…

2ஜி வசன விவகாரம்: விஜய்,முருகதாஸ் மீது அவதூறு வழக்கு!…

2ஜி வசன விவகாரம்: விஜய்,முருகதாஸ் மீது அவதூறு வழக்கு!… post thumbnail image
சென்னை:-நாகமலைப்புதுக்கோட்டை வக்கீல் ராமசுப்பிரமணியன் மதுரை ஆறாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: கத்தி திரைப்படத்தை, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் பேசும் போது, டில்லி பாட்டியாலா கோர்ட்டில் நிலுவையில் உள்ள, 2ஜி வழக்கு குறித்த வசனம் இடம் பெற்றிருந்தது. 2ஜி என்றால் என்னன்னு தெரியுமா…? வெறும் காற்றை வைத்து கொள்ளையடித்தவர்கள் இருக்கும் ஊரு இது என்ற வசனம், இந்த நாட்டையும், நாட்டை ஆட்சி செய்தவர்களையும் கேவலமாக சித்தரித்துள்ளது.

கோர்ட்டில் நிலுவையிலுள்ள வழக்கை அரசியல் ஆதாயத்திற்காக, பல கோடி மக்கள் பார்க்கும் சினிமாவில் விஜய் யன்படுத்தியுள்ளார். 2ஜி வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப் படாத நிலையில், அதை குற்றமாக சித்தரித்து கோர்ட்டை அவமதித்து உள்ளனர்.இந்தியாவை ஊழல் நாடாக சித்தரித்து, அன்னிய நாடுகள் உயர் தொழில்நுட்பத்தை, இந்தியாவில் முதலீடு செய்ய தயங்கும் சூழலை உருவாக்கியுள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு, 500ன் படி நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், லைக்கா நிறுவனம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டுள்ளார். மாஜிஸ்திரேட் மாரீஸ்வரி முன், மனு விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணை, நவ., 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி