செய்திகள்,திரையுலகம் ஹேப்பி நியூ இயர் படத்தை பார்க்க முடியாததால் ஆசிட் குடித்த இளம்பெண்!…

ஹேப்பி நியூ இயர் படத்தை பார்க்க முடியாததால் ஆசிட் குடித்த இளம்பெண்!…

ஹேப்பி நியூ இயர் படத்தை பார்க்க முடியாததால் ஆசிட் குடித்த இளம்பெண்!… post thumbnail image
மும்பை:-மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் வசித்து வரும் 21 வயது இளம்பெண் ஒருவர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஹேப்பி நியூ இயர் படத்திற்கு செல்ல கணவரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

திரையரங்கில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறி மனைவியை விட்டுவிட்டு கணவர் மட்டும் படத்திற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த மனைவி அசிட் குடித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது. உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பெண் மேல் சிகிச்சைக்காக குவாலியருக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆசிட் குடலுக்குள் சென்றதால் அவரின் உடலின் உள் உறுப்புகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி