செய்திகள்,திரையுலகம் ஹாலிவுட்டை காப்பியடிக்கவில்லையாம் இயக்குனர் வெங்கட்பிரபு!…

ஹாலிவுட்டை காப்பியடிக்கவில்லையாம் இயக்குனர் வெங்கட்பிரபு!…

ஹாலிவுட்டை காப்பியடிக்கவில்லையாம் இயக்குனர் வெங்கட்பிரபு!… post thumbnail image
சென்னை:-இயக்குனர் வெங்கட்பிரபு இப்போது சூர்யாவைக்கொண்டு ‘மாஸ்’ என்ற படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளி அன்று வெளியிட்டார். ப்ளாக் அண்ட் ஒயிட்டில் வெளியான அந்த கெட்டப்பில் ஒரு டெரர் லுக்கில் இருந்தார் சூர்யா.

இந்நிலையில், அப்படத்தில் சில பேய்களின் நிறைவேறாத ஆசைகளை சூர்யா நிறைவேற்றுவது போன்ற கதையில் நடித்துக்கொண்டிருப்பதாக அந்த படத்தின் கதை பற்றியும் செய்திகள் கசிந்தன. என்றாலும் அதைப்பற்றி அப்படத்தின் டைரக்டரான வெங்கட்பிரபு எந்த மறுப்பும் சொல்லவில்லை. ஆனால், அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஹாலிவுட் படங்களில் வெளியானது அதை அவர் அப்பட்டமாக காப்பியடித்திருக்கிறார் என்று வெளியான செய்திக்கு மட்டும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ள செய்தியில், மாஸ் படத்திற்காக நாங்கள் வெளியிட்ட சூர்யாவின் கெட்டப்புக்கு மஷாட் என்று பெயர். இதுபோன்று பல படங்களின் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அந்த பாணி இந்த கெட்டப்புக்கு தேவைப்பட்டதால் அதை கையாண்டிருக்கிறோம். மற்றபடி ஹாலிவுட் சாயலில் போஸ்டர் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நாங்கள் செய்யவில்லை என்று வெங்கட்பிரபு கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி