செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!…

நடிகர் விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகர் விஜய் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பது. நலத்திட்ட உதவிகள் வழங்குவது என்று தனது மன்றங்களை பெரிய அளவில் வளர்த்து வைத்திருக்கிறார். அதோடு, தனது பட விழாக்கள் சென்னையில் நடைபெறும்போதும் அவர்களை வரவைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இதனால் நாளுக்கு நாள் விஜய்க்கான ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கத்தி படத்துக்கும் தமிழகமெங்கிலும் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வரும் விஜய் ரசிகர்கள், இதுவரை தியேட்டர் வளாகங்களில் போஸ்டர், கட்அவுட் என்று வைத்து வந்தவர்கள், இப்போது சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் விஜய்க்கு மெழுகால் ஆன சிலை வைத்து பரபரப்பு கூட்டியுள்ளனர். இந்த சிலையின் மதிப்பு ரூ.1.5 லட்சமாம். அந்த சிலை நேற்று காலை திறந்து வைக்கப்பட்டது.அப்போது அந்த சிலையை நிறுவிய பேஸ்புக் விஜய் பேன்ஸ் கிளப் ரசிகர்கள் அந்த சிலையுடன் நின்று வணங்குவது போலவும், முத்தம் கொடுப்பது போலவும் விதவிதமான போட்டோக்களை எடுத்துக்கொண்டதோடு, அந்த போட்டோக்களை இணையதளங்களிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர்.

இந்த சேதியறிந்து ஏராளமான ரசிகர்கள் அந்த தியேட்டருக்கு வந்து விஜய்யின் சிலையை பார்த்த வண்ணம் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தீவிர ரசிகர்களான இரண்டு சிற்பிகள் விஜய்க்கு கல்லிலேயே சிலை வடித்தனர். அது விஜய்க்கு தெரிவிக்கப்பட்டபோது அவரது தந்தை எஸ்.ஏ.சி அந்த சிற்பிகளை நேரில் சந்தித்து அந்த சிலையை பார்த்து விட்டு வந்தார் என்பது குறிப்பித்தக்கது. அதையடுத்து இப்போது இன்னொரு அழகான சிலையை விஜய்யின் சென்னை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
ஆக தமிழகத்தின் தற்போதைய இளவட்ட ஹீரோக்களில் சிலை வைக்கப்பட்ட முதல் நடிகராகியிருக்கிறார் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி