அரசியல்,செய்திகள்,திரையுலகம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!…

அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!…

அமிதாப் பச்சனுக்கு அமெரிக்க கோர்ட் சம்மன்!… post thumbnail image
நியூயார்க்:-முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது நாடு தழுவிய அளவில் சீக்கிய இன மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. டெல்லியில் சீக்கியர் மீதான கலவரங்களை தூண்டியதாக இந்திரா காந்தியின் குடும்ப நண்பரான நடிகர் அமிதாப் பச்சன் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் நடந்து, முடிந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அமெரிக்காவில் இயங்கிவரும் ‘சீக்கியருக்கான நீதி’ என்ற அமைப்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அமெரிக்காவின் சட்டதிட்டங்களின்படி, உலகில் எந்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களாக இருந்தாலும், அவர்கள் தற்போது அமெரிக்காவில் வசித்துவந்தால், முன்னர் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் கோரி அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடர முடியும். அதன்படி, தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் டெல்லியில் சீக்கியர் மீதான கலவரங்களை தூண்டியதாக நடிகர் அமிதாப் பச்சன் மீது தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது 35 பக்கங்கள் கொண்ட புகார் மனு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இன்னும் 21 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். ‘சீக்கியருக்கான நீதி’ என்ற இந்த அமைப்பு ஏற்கனவே, 1984-கலவரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் மீது அமெரிக்க கோர்ட்டுகளில் வழக்கு தொடுத்திருப்பதும், இவர்களுக்கு நீதிபதி சம்மன்களை அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி