செய்திகள்,திரையுலகம் நவம்பர் 9ல் ‘லிங்கா’ படத்தின் ஆடியோ வெளியீடு!…

நவம்பர் 9ல் ‘லிங்கா’ படத்தின் ஆடியோ வெளியீடு!…

நவம்பர் 9ல் ‘லிங்கா’ படத்தின் ஆடியோ வெளியீடு!… post thumbnail image
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார்-ரஜினிகாந்த்ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றி வரும் படம் ‘லிங்கா’. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், ஆடியோவை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதியும், படத்தை பொங்கலுக்கும் வெளியிட முடிவு செய்தனர். ஆனால், தற்போது ரஜினியின் பிறந்தநாளைக்கே படத்தை வெளியிடப் போகிறார்களாம். ஆகையால், அதற்கு முன்னதாக ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற நவம்பர் 9ம் தேதி லிங்கா படத்தின் ஆடியோவை வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது.

லிங்கா படக்குழு தற்போது படத்தின் அறிமுகப் பாடலுக்காக சீனாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மகாவ்வில் முகாமிட்டுள்ளது. மேலும், இப்பாடலுக்கான இதர காட்சிகளை அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற பகுதிகளில் படமாக்கவுள்ளனர். இதை முடித்துவிட்டு விரைவில் இந்தியா திரும்பி இறுதிக்கட்டப் பணிகளை தொடங்கவுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி