அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவில் உள்ள கோடீசுவரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தன் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தெரிவித்து இருந்தது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி பொறுப்பேற்ற பா.ஜ.க. அரசு, வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க முயற்சி செய்வதாகவும் அதற்கென தனி குழு அமைக்கப்படுவதாகவும் கூறியது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி, ஜெர்மனியுடன் செய்துள்ள ஒப்பந்தம் காரணமாக கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிட இயலவில்லை என்றார்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விஷயத்தில் பா.ஜ.க. இரட்டை நிலைப்பாட்டை கடை பிடிப்பதாக குற்றஞ்சாட்டினார்கள். இதற்கு பதில் அளித்த அருண்ஜேட்லி, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிட்டால் அது காங்கிரசுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றார். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களில் 3 பேர் பெயர்களை முதலில் அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கருப்புப் பணம் பதுக்கியவர்கள் பற்றிய பட்டியல் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் 3 கோடீசுவரர்கள் பற்றிய விபரம் வருமாறு:–

1. பிரதீப் பர்மன்: இவர் தபூர் குரூப் தொழில்களின் இயக்குனர் ஆவார்.

2. பங்கஜ் சிமன்லால் லோதியா: இவர் ராஜகாட் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர்.

3. ராதா எஸ். டிம்ப்ளோ இவர் கோவாவைச் சேர்ந்த தொழில் அதிபர்.

இந்த 3 தொழில் அதிபர்களும் வெளிநாட்டு வங்கிகளில் எத்தனை கோடி பணம் பதுக்கியுள்ளனர் என்ற விபரம் தெரியவில்லை. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்டியலில் அரசியல்வாதிகள் யார் பெயரும் இடம் பெற வில்லை. இதற்கிடையே தங்கள் மீதான குற்றச்சாட்டை தொழில் அதிபர்கள் மறுத்துள்ளனர். இது பற்றி கருத்து தெரிவித்த பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் நாங்கள் முந்தைய காங்கிரஸ் அரசு போல் இந்த விஷயத்தில் செயல்பட மாட்டோம். எல்லா கருப்புப்பண பேர் வழிகளையும் வெளியிடுவோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி