செய்திகள்,திரையுலகம் இறந்த ரசிகருக்கு உதவி செய்த பிரபல நடிகர்!…

இறந்த ரசிகருக்கு உதவி செய்த பிரபல நடிகர்!…

இறந்த ரசிகருக்கு உதவி செய்த பிரபல நடிகர்!… post thumbnail image
சென்னை:-தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’. இந்தப் படம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள, எம்மிகானூர் என்ற ஊரில் வெளியான போது தியேட்டர் நெரிசலில் சிக்கி அவருடைய ரசிகரான கன்னையா என்பவர் உயிரிழந்தார்.அவரது மரணச் செய்தி கேட்டு அப்போதே ராம் சரண் தேஜா இரங்கல் தெரிவித்திருந்தார்.

அதோடு அவரது குடும்பத்தாருக்காக 2 லட்ச ரூபாய் நிதி உதவி செய்வதாகவும் அறிவித்திருந்தார். அந்தத் தொகையை தற்போது, கன்னையா குடும்பத்திற்கு வழங்கியிருக்கிறார். சிரஞ்சீவி நற்பணி மன்ற தலைவர் ஒருவர் மூலம் 2 லட்ச ரூபாய்க்கான செக்கை கன்னையா குடும்பத்தினருக்கு சேர்ப்பித்திருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி