நொறுக்கு தீனி சாப்பிட்டதால் சிக்கலில் சிக்கிய நடிகை ஸ்ரேயா!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை ஸ்ரேயாவுக்கு, தற்போது தமிழில் படமில்லை என்றாலும், தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், முன் மாதிரி பிசியான படப்பிடிப்பு இல்லை என்பதால், ‘டிவி’ பார்த்துக் கொண்டே நொறுக்குத் தீனி சாப்பிடுவதே, அவரின் பொழுதுபோக்காகி விட்டதாம்.விளைவு, அவரது கட்டுப்பாட்டையும் மீறி, உடல்கட்டு ஒரு சுற்று பெருத்து விட்டதோடு, அவரது பற்களும் நிறம் மாறி விட்டதாம்.

இதையடுத்து, உடல் எடையை குறைத்து விட்டு வந்தால் தான், படப்பிடிப்பை தொடர முடியும் என்று தெலுங்கு பட இயக்குனர், ஸ்ரேயாவை வீட்டிற்கு அனுப்பி விட்டாராம். அதனால் தற்போது, நொறுக்கு தீனிக்கு முழுசாக குட்பை சொல்லி விட்டு, உடல் எடையை குறைத்து வரும் ஸ்ரேயா, தன் பற்களுக்கும் சிகிச்சை எடுத்து உள்ளாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: