நடிகை ஆண்ட்ரியாவின் ஆசையை நிறைவேற்றிய சுந்தர்.சி!…

விளம்பரங்கள்

சென்னை:-அரண்மனை படத்தில் ஆண்ட்ரியா சிறப்பாக நடித்திருக்கிறார் என்று ஆளாலுக்கு புகழாரம் சூட்டி விட்டனர். இந்நிலையில், விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் ஆம்பள படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் ஆண்ட்ரியா. இதற்கு முன்பே எத்தனையோ டைரக்டர்கள் குத்தாட்டமாட தன்னை துரத்தியபோதும் நழுவிக்கொண்டு வந்த ஆண்ட்ரியா, சுந்தர்.சி அபிமானத்திற்குரிய டைரக்டராகி விட்டதால் அவரது வார்த்தையை தட்ட முடியாமல் சம்மதம் சொன்னாராம். ஆனால் அதற்கு இன்னொரு காரணமும் உள்ளதாம்.

விஷாலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக ஆண்ட்ரியாவுக்கு இருந்து வந்ததாம். அவர் எடுத்து வந்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லையாம். அதனால்தான் குத்தாட்டம் மூலமாவது விஷாலை நெருங்குவோம் என்பதற்காக மறுயோசனை இன்றி உடனே ஓ.கே சொன்னாராம் ஆண்ட்ரியா. ஆக, ஆண்ட்ரியாவின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் சுந்தர்.சி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: