ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர் ஸ்டார் தான் – தனுஷ்!…

விளம்பரங்கள்

சென்னை:-தீபாவளியன்று ‘கத்தி’, ‘பூஜை’ படங்கள் வெளியானது. இதே நாளில் தனுஷின் ‘அனேகன்’ டிரைலரும், ‘காவியத்தலைவன்’ டிரைலரும் வெளியானது. இத்துடன் சூர்யாவின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரும், ரஜினியின் ‘லிங்கா’ பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இது அவரவர் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

இதில் லிங்கா படத்தின் போஸ்டர் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இந்த போஸ்டர் இண்டர்நெட்டில் மற்றும் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் போஸ்டரைப் பற்றி நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர்ஸ்டார் தான்’ என்று தனது சந்தோஷத்தையும் ரஜினியை புகழ்ந்தும் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: