செய்திகள்,திரையுலகம் ரஜினியை சிரிக்க வைக்கும் நடிகர் சந்தானம்!…

ரஜினியை சிரிக்க வைக்கும் நடிகர் சந்தானம்!…

ரஜினியை சிரிக்க வைக்கும் நடிகர் சந்தானம்!… post thumbnail image
சென்னை:-தற்போது ‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் படம் முழுக்க வரும் காமெடியனாக வந்து கலகலப்பாக்கிக் கொண்டிருக்கிறாராம் நடிகர் சந்தானம். அதோடு மட்டுமின்றி, ஸ்பாட்டில் ரஜினி ஓய்வாக இருக்கும் நேரங்களில் அவரது கேரவனுக்குள் புகுந்து ஏதாவது விசயங்களை ஜாலியாக பேசி அவரையும் சிரிக்க வைத்து வருகிறாராம்.

இதனால் கொஞ்சம் நேரம் சந்தானத்தை காணவில்லை என்றால், சந்தானத்தை எங்கே காணல? என்று ரஜினியே கேட்கிற அளவுக்கு அவர் மனதில் இடம் பிடித்து விட்டாராம் சந்தானம். அதோடு, லிங்காவில் ரஜினி இப்போதைய யூத் ஹீரோக்களைப் போன்று ஜீன்ஸ்-டீசர்ட் என்று அணிந்து கலக்குவதால், உங்களுடன் நடிப்பது எனக்கு ஒரு பெரிய ஹீரோவுடன் நடிப்பது போன்ற பீலே இல்லை. இளவட்ட நடிகர்களுடன் நடிப்பது போன்றுதான் இருக்கிறது என்றும் சொல்லி, ரஜினியையும் யூத் மனநிலைககு மாற்றுகிறாராம் சந்தானம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி