செய்திகள்,விளையாட்டு ஒருநாள் தர வரிசையில் விராட்கோலி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!…

ஒருநாள் தர வரிசையில் விராட்கோலி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!…

ஒருநாள் தர வரிசையில் விராட்கோலி 2வது இடத்துக்கு முன்னேற்றம்!… post thumbnail image
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அணிகளின் செயல்பாடு மற்றும் வீரர்களின் ஆட்டத்துக்கு தகுந்தபடி கணித்து தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

இதன்படி, இங்கிலாந்து தொடரில் பார்மில் இல்லாததால் தர வரிசையில் சறுக்கலை கண்ட இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட்கோலி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கடைசி போட்டியில் சதம் அடித்ததுடன் மொத்தம் 191 ரன்கள் குவித்ததன் மூலம் பேட்டிங் தர வரிசையில் 2–வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 2–வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி