செய்திகள்,திரையுலகம் சிம்புவுக்காக விட்டு கொடுத்த நடிகர் தனுஷ்!…

சிம்புவுக்காக விட்டு கொடுத்த நடிகர் தனுஷ்!…

சிம்புவுக்காக விட்டு கொடுத்த நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-தனுஷ் தயாரிப்பில் ‘காக்கா முட்டை’ என்ற படம் தற்போது பல விருது விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை அள்ளி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிம்பு நடித்துள்ளார் என்ற செய்தி முன்பே வெளியே வந்தாலும் அதை உறுதி செய்யவில்லை. காக்கா முட்டை பல விருது விழாக்களில் கலந்து வருவதால் படத்தின் கதையும் அதில் சிம்பு என்னவாக நடித்து இருக்கிறார் என்ற விஷயமும் கசிந்துள்ளது.

நான்கு சேரி சிறுவர்கள் நெருக்கமான நண்பர்கள். அவர்களின் சேரிக்கு அருகில் ஒரு பீட்சா கடை வருகிறது. அந்த கடைக்கு சென்று ஒரு பீட்சாவை வாங்கி ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதுதான் அவர்கள் ஆசை. அதற்காக அவர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் ஆசை நிறைவேறியதா என்பதுதான் கதை. இந்த படத்தில் சிம்பு நடிகராகவே வருகிறார், சிறுவர்கள் நான்கு பேரும் சிம்புவின் பரம ரசிகர்கள், அவர்களுக்கு சிம்புவை நேரில் சந்தித்து கைகுலுக்க வேண்டும் என்பது லட்சியம். அது எப்படி நிறைவேறுகிறது என்பது படத்தில் வரும் காட்சி.

இயக்குனர் இது பற்றி கூறுகையில், முதலில் இக்காட்சி சிம்பு நடிக்கிறார் என்று தான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தனுஷ் படத்தை தயாரிக்கிறார் என்ற செய்தி எனக்கு கிடைத்தவுடன் சரி தனுஷை வைத்து எடுத்து விடுவோம் என்று நினைத்தேன், இதை அறிந்த தனுஷ் நீங்கள் ஒன்றும் மாற்ற வேண்டாம் சிம்புவே நடிக்கட்டும், நானே அவரிடம் பேசுகிறேன் என்று கால்ஷீட் வாங்கி கொடுத்தார் என இயக்குனர் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி