செய்திகள்,திரையுலகம் அஜீத்துடன் ஜோடி சேரும் நடிகை ஹன்சிகா!…

அஜீத்துடன் ஜோடி சேரும் நடிகை ஹன்சிகா!…

அஜீத்துடன் ஜோடி சேரும் நடிகை ஹன்சிகா!… post thumbnail image
சென்னை:-நடிகர் அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கிவரும் தல55 படத்தில் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு ஆந்திராவில் செட் அமைத்து கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. பொங்கலுக்கு முன்னதாகவே இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தையடுத்து அஜீத் ‘வீரம்’ படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அஜீத்துக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்குமுன் அஜீத் ஜோடியாக வித்யாபாலன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்தன. அதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி