லண்டனில் டூயட் பாடிய உதயநிதி-நடிகை நயன்தாரா!…

விளம்பரங்கள்

சென்னை:-உதயநிதியும்-நயன்தாராவும் மீண்டும் இணைந்திருக்கும் ‘நண்பேன்டா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை ஜெகதீஷ் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள ஒரு துள்ளலான பாடலுக்கு உதயநிதியும்-நயன்தாராவும் ஆடிப் பாடும், இப்பாடல் லண்டனின் முக்கிய வீதிகளில் படமாக்கிவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகளை விரைவில் தொடங்கவுள்ளனர். படத்திற்கு இடையில் சேர்க்கக்கூடிய சிறுசிறு காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கவுள்ளனர். ‘நண்பேன்டா’ படம் சென்னை மற்றும் கும்பகோணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மென்மையான காதல் கலந்த, நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: