செய்திகள்,திரையுலகம் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை கவர்ந்த கன்னட படம்: தமிழில் ரீமேக் செய்து நடிக்கிறார்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை கவர்ந்த கன்னட படம்: தமிழில் ரீமேக் செய்து நடிக்கிறார்!…

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை கவர்ந்த கன்னட படம்: தமிழில் ரீமேக் செய்து நடிக்கிறார்!… post thumbnail image
சென்னை:-ரஜினி பெங்களூரில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய போது தன்னுடன் டிரைவராக பணியாற்றிய நண்பர் ராஜ்பகதூருடன் இணைந்து நிறைய கன்னட படங்கள் பார்த்தது உண்டு. பழைய கன்னட படங்கள் அவருக்கு மிகவும் பிடித்தவைகளாக இருந்தன. அதில் ஒரு படம் ரஜினியை அதிகம் கவர்ந்தது. அந்த படத்தின் பெயர் பங்காரா மனுஷ்யா, ராஜ்குமார் நடித்து இருந்தார். படித்த இளைஞர்களை விவசாயத்துக்கு திருப்பி விடும் கதையம்சத்தில் அப்படம் இருந்தது. அதைதான் தமிழில் ரீமேக் செய்து நடிக்கப் போகிறார்.

இந்த தகவலை ரஜினி நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்து உள்ளார். அவர் கூறும் போது, லிங்கா படம் தயாராகும் முன்பு நானும் ரஜினியும் பங்காரா மனுஷ்யா படத்தை பார்த்தோம். அந்த படத்தை ரீமேக் செய்து நடிக்கலாமே என்று ரஜினியிடம் சொன்னேன். அவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு சரி நானே ரீமேக் செய்து நடிக்கிறேன் என்றார்.

அதன் பிறகு தான் கே.எஸ்.ரவிக்குமார் லிங்கா படத்தின் கதையை ரஜினியிடம் சொன்னார். அந்த கதை ரஜினிக்கு பிடித்து போனது. உடனே என்னிடம் போனில் தொடர்பு கொண்டு முதலில் லிங்கா படத்தை முடித்து விடுகிறேன். அதன் பிறகு பங்காரா மனுஷ்யா ரீமேக்கில் நடிக்கிறேன் என தெரிவித்தார் என்றார்.பங்காரா மனுஷ்யா படம் 1972–ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதன் தமிழ் ரீமேக்கை கே.எஸ்.ரவிக்குமாரே இயக்குவார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி