செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…

எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!…

எபோலா நோயினால் உணவுப் பஞ்சம் அபாயம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!… post thumbnail image
நியூயார்க்:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் நோய் லைபீரியா, சியாரா லோன், கினியா உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் மிக வேகமாக பரவுகிறது. தற்போது அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதற்கிடையே ஐ.நா. சபையின் சார்பில் உலக உணவு நாள் கொண்டாடப்பட்டது. அப்போது, எபோலா நோய் இன்னும் தொடர்ந்து பரவினால் உலக அளவில் பற்றாக்குறை உணவு பஞ்சம் உருவாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

தற்போது எபோலா நோய் கடுமையாக பாதித்துள்ள லைபீரியா, சியாரா லோன், கினியா ஆகிய நாடுகளில் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் போதிய உணவு கிடைக்காமல் தவிக்கின்றனர். இதே நிலை சர்வதேச அளவில் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் வந்த ‘ஏர்பிரான்ஸ்’ விமானம் ஒரு இடத்தில் ஒதுக்குப்புறமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏனெனில், அந்த விமானத்தில் ‘எபோலா’ நோயின் அறிகுறியான கடுமையான காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் ஒரு பயணி இருந்தார். அதனால் இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி