அஜீத்தை கேட்ச் பண்ணுகிறார் நடிகை ஹன்சிகா!…

விளம்பரங்கள்

சென்னை:-நடிகை ஹன்சிகாவுக்கு வேலாயுதம் படத்தையடுத்து தற்போது சிம்புதேவன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் விஜய்யுடன் நடிக்க சான்ஸ் கிடைத்து விட்டபோதும், அஜீத்துடன் மட்டும் ஒரு படத்தில்கூட நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் இந்த தருணத்தை விட்டு விடக்கூடாது என்று நினைக்கும் ஹன்சிகா, அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

அவர் எடுத்த முயற்சி காரணமாக, வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, அடுத்து அஜீத்தை இயக்கும் படத்தில் ஹன்சிகா நடிப்பதற்கான சூழ்நிலை நிலவியிருக்கிறதாம். அந்த படத்திற்கு ஏற்கனவே சமந்தா, ஸ்ருதிஹாசன் என சில நடிகைகளும் போட்டிபோட்டு வரும் நிலையில், ஹன்சிகாதான் அந்த ரோலுக்கு பொருத்தமாக இருப்பார் என்று சிறுத்தை சிவாவே கூறி விட்டதாக ஹன்சிகாதரப்பில இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: