செய்திகள்,திரையுலகம் ‘தல 55’ படம் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம்!…

‘தல 55’ படம் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம்!…

‘தல 55’ படம் பற்றி ஒரு சிறிய முன்னோட்டம்!… post thumbnail image
அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் கிளைமாக்ஸ் மட்டுமே எடுக்கப்பட உள்ளது. விரைவில் படத்தின் டீசர், பாடல்கள் அடுத்தடுத்து வர இருக்கிறது. அதற்கு முன் இப்படம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம் இது…

* படத்தில் அஜீத்துக்கு இரண்டு கெட்அப். இரண்டு கேரக்டர் அல்ல. ஒன்று வாலி காலத்து அழகு தோற்றம். இன்னொன்று மங்காத்தா காலத்து சால்ட் அண்ட் பெப்பர் தோற்றம்.

* அஜீத்தின் 28 வயது முதல் 38 வயது வரையிலான பத்து வருட வாழ்க்கைதான் கதை.

* அஜீத்திற்கு இரண்டு ஜோடிகள் பிளாஷ் பேக்கில் திரிஷா ஜோடி. கதை காலத்தில் அனுஷ்கா ஜோடி. இருவருக்கும் காமினேஷன் கிடையாது. இருவருக்கும் சமமான பங்குள்ள கேரக்டர்.

* படத்திற்காக அஜீத் குத்துச் சண்டையும், கிதார் வாசிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஒன்றை சண்டை காட்சியிலும், மற்றொன்றை பாடல் காட்சியிலும் பயன்படுத்தியிருக்கிறார் கெளதம் மேனன்.

* படத்தில் ஹீரோயிசம் பன்ஞ் டயலாக் எதுவும் கிடையாது. ஆனால் கதையோட்டத்துடன் அஜீத் பேசும் சில வசனங்களில் அனல் பறக்கும்.

* நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ், தாமரை கூட்டணி இணைந்திருக்கிறது. மொத்தம் 5 பாடல்கள். ஐந்தும் ஐந்துவித சூழலில் உருவாகி இருக்கிறது. ஹீரோ பில்டப் சாங், அறிமுக சாங் எதுவும் கிடையாது.

* படத்தின் தலைப்பை போலவே கிளைமாக்சையும் சஸ்பென்சாக வைத்திருக்கிறார் கவுதம் மேனன். மொத்தம் 3 கிளைமாக்சுகளை கையில் வைத்திருக்கிறார். கடைசியாக அஜீத்துடன் உட்கார்ந்து பேசி அவர் எதை டிக் செய்கிறாரோ அதை படம்பிடிக்க உள்ளார்.

* கவுதம் மேனன் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த துப்பறியும் ஆனந்த் கதையைத்தான் சில மாற்றங்கள் செய்து இதனை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களுக்கும் ஸ்கிரிப்ட் ரெடியாக வைத்திருக்கிறார்.

* படத்திற்கு சத்யா, அல்லது ஆயிரம் தோட்டாக்கள் என்று தலைப்பு வைக்கப்படலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி