பாபநாசம் படப்பிடிப்பில் நடிகர் கமல்ஹாசன் படுகாயம்!…

விளம்பரங்கள்

சென்னை:-மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படம் தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடிக்கிறார்கள்.இதன் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. தொடர்ந்து கேரளாவிலும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்கிடையே கமலஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒருமாதமாக ஒத்திவைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் தொடங்கியது. தொடுபுழாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இதற்கான சூட்டிங் நடந்தது.

போலீசார் தாக்கியதில் மூக்கில் ரத்தம் உறைந்து கட்டியாக இருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதற்காக கமலஹாசன் மூக்கில் ரப்பர் துண்டு ஒன்று வைக்கப்பட்டது. அந்த துண்டு மூக்கின் உள்ளே சென்று விட்டதால் கமலஹாசன் மூச்சு விட முடியாமல் திணறியதோடு அவரது மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியது. பதறிப்போன படப்பிடிப்பு குழுவினர் அவரை தொடுபுழாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து மூக்கில் இருந்த ரப்பர் துண்டு அகற்றப்பட்டது. சில மணி நேர சிகிச்சைக்கு பின்னர் கமலஹாசன் இயல்புநிலைக்கு திரும்பினார். பின்னர் அங்கேயே சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பின்னர் அவர் அங்கிருந்து மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: