நேபாளத்தில் பனிப்புயல்: இந்தியர்கள் உள்பட 30 பேர் பலி!…

விளம்பரங்கள்

காத்மாண்டு:-நேபாளத்தில் உள்ள இமயமலை பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஏராளமான வெளிநாட்டினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள மனாங், முஸ்டாங் மாவட்டங்களில் இமயமலையில் உள்ள அன்னபூர்ணா மலை பகுதியில் திடீரென பனிப்புயல் வீசியது.

அதனால் பனிப்பாறைகள் சரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 30 பேர் பலியாகினர். அவர்களில் இந்தியாவை சேர்ந்த 3 மலையேறும் வீரர்கள் அடங்குவர். இவர்கள் தவிர இஸ்ரேல், கடனா வியட்நாமை சேர்ந்த மலையேறும் வீரர்களும், 11 நேபாள வழிகாட்டிகளும் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

பனிப்புயல் வீசும் போது இப்பகுதியில் 200 பேர் இருந்தனர். இறந்தவர்கள் போக இன்னும் 70 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் 4 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. நேபாள ராணுவமும், போலீசாரும் உதவியாக உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: