செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் முதல் முறையாக மற்றொரு சூரிய மண்டலத்தில் யுரேனஸ் போன்ற கிரகம் கண்டு பிடிப்பு!…

முதல் முறையாக மற்றொரு சூரிய மண்டலத்தில் யுரேனஸ் போன்ற கிரகம் கண்டு பிடிப்பு!…

முதல் முறையாக மற்றொரு சூரிய மண்டலத்தில் யுரேனஸ் போன்ற கிரகம் கண்டு பிடிப்பு!… post thumbnail image
வாஷிங்டன்:-வானியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் 25 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மற்றொரு சூரிய குடுமபத்தில் ஐஸ் கட்டிகளால் ஆன யுரேனஸ் போன்ற கிரகத்தை கண்டுபிடித்து உள்ளனர். வானியல் ஆராய்ச்சியாளர்கள் பால் வீதியில் பூமிபோல் உள்ள ராக்கி கிரகம் ஜுபிடர் கிரகம் போல் உள்ள வாயு கிரகம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட கிரகங்களை கண்டு பிடித்து உள்ளனர். ஆனால் இது நமது சூரியமண்டலத்தில் உள்ள உள்ள மூன்றாவது வகையான கிரகம் போல் உள்ளது.

புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட கிரகம் கொந்தளிப்பு நிறைந்த நிலையை கொண்டு உள்ளது. இரட்டை நடசத்திர அமைப்பில் பால் வெளி மண்டலத்தில் இக்கிரகம் அமைந்து உள்ளது..முதல் நட்சத்திரம் மூன்றில் இரண்டு பூமியின் சூரியன் போன்று பெரியதாக இருக்கும். இரண்டாவது நட்சத்திரம் ஆறில் ஒன்று பெரியதாக இருக்கும். இந்த கிரகம் யுரேனஸ் போல் 4 மடங்கு அதிகமாக உள்ளது. ஆனால் வட்டபாதையில் முதல் நடசத்திரம் கிட்டதட்ட அதே தூரத்தில் யுரேனஸ் வட்டபாதையில் நமது சூரியனை சுற்றி வருகிறது.யுரேனஸ் குறித்த தகவல்கள்

யுரேனஸ் கிரகம் 51118 கி.மீ. விட்டமுடையது. பூமியை விட 15 மடங்கு பெரியது. யுரேனஸ்சின் சுற்றுப்பாதை நீளம் 287,09,90,000 கி.மீ. இதை ஒரு முறை சுற்றி முடிக்க எடுத்துக்கொள்ளும் 84 ஆண்டுகள், தன்னை தானே சுற்ற 17 மணி நேரம் ஆகிறது. உறைந்த வாயுமண்டலத்தில் மீதேன் நிறைந்துள்ளது. மீதேன் சிவப்பு ஒளியை சாப்பிட்டு விடுவதால் நீலம் மற்றும் பச்சை ஒளியை மட்டுமே யுரேனஸ் கிரகம் பிரதிபலிக்கிறது.யுரேனஸ்சுக்கு 20 துணைக்கோள்கள் உள்ளன. இதில் 5 பெரியவை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி