செய்திகள்,திரையுலகம் நடிகர் தனுஷின் அனேகன் தீபாவளிக்கு வெளியீடு!…

நடிகர் தனுஷின் அனேகன் தீபாவளிக்கு வெளியீடு!…

நடிகர் தனுஷின் அனேகன் தீபாவளிக்கு வெளியீடு!… post thumbnail image
சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அனேகன். இந்தப் படத்தில் அமிரா தஸ்தர் என்ற புதுமுகம் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகிறார். கார்த்திக் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் இதனை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

நீண்டகால தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை வரும் தீபாவளிக்கு வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து ஆடியோ வெளியீட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியுள்ளார். இரண்டாம் உலகம் படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் தனுஷ் பாடியுள்ள பாடல் இது.

தீபாவளிக்கு ‘கத்தி’, ‘பூஜை’ ஆகிய படங்கள் வெளி வருகின்றன. அத்துடன் அனேகன் டீசர் மட்டுமின்றி வரும் தீபாவளி தினத்தில் அஜித்கௌதம்மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டீசரும், விக்ரம் பிரபு நடிக்கும் வெள்ளக்கார துரை படத்தின் டீசரும் வெளியாக உள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி