சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…

விளம்பரங்கள்

ஜோஹர் பாரு:-6 அணிகள் இடையிலான 4-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் மோதியது. ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் ஆடிய இந்திய வீரர்கள் 22-வது நிமிடத்தில் கோல் கணக்கை தொடங்கினர்.

எதிரணி நிமிர முடியாத அளவுக்கு அடுத்தடுத்து கோல் மழை பொழிந்த இந்தியா 6-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. இந்திய தரப்பில் துணை கேப்டன் இம்ரான்கான், பர்விந்தர்சிங், அர்மான் குரேஷி (2), ஹர்மன்பிரீத் சிங், வருண்குமார் ஆகியோர் கோல் போட்டனர். 3-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். இந்தியா அடுத்து மலேசியாவை நாளை எதிர்கொள்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: