செய்திகள்,திரையுலகம் தேவையில்லாமல் என் பெயரை டேமேஜ் செய்கிறார்கள் – ஸ்ரீதிவ்யா!…

தேவையில்லாமல் என் பெயரை டேமேஜ் செய்கிறார்கள் – ஸ்ரீதிவ்யா!…

தேவையில்லாமல் என் பெயரை டேமேஜ் செய்கிறார்கள் – ஸ்ரீதிவ்யா!… post thumbnail image
சென்னை:-தற்போது வெள்ளைக்கார துரை என்ற படத்தில் புதிதாக கமிட்டாகியிருக்கும் நடிகை ஸ்ரீதிவ்யா கோலிவுட்டில் லட்சுமிமேனனின் இடத்தை கைப்பற்றி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், ஒரே நேரத்தில் பல கம்பெனிகளுக்கு அவர் டேட்ஸ் கொடுத்து கால்சீட் சொதப்பல் செய்து வருவதாக ஸ்ரீதிவ்யா பற்றி செய்தி பரவியிருக்கிறது. ஆனால் இந்த செய்தியை அவசரகதியில் மறுத்திருக்கிறார் அவர்.

நான் ஒரே நேரத்தில் பல படங்களுக்கு கால்சீட் கொடுப்பதில்லை. சில சமயங்களில் நான் கால்சீட் கொடுத்த நாளில் கம்பெனிகள் படப்பிடிப்பு நடத்துவதில்லை. மாறாக, வேறு நாளில் படப்பிடிப்பு வைத்து எனனிடம் கால்சீட் கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் கேட்கிற தேதியில் நான் வேறு படத்திற்கு எற்னவே கால்சீட் கொடுத்திருப்பதால் நடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுதான் உண்மை. அந்த மாதிரி கம்பெனிகள்தான் நான் கால்சீட் குளறுபடி செய்வதாக சொல்கிறார்கள். அவர்கள் மீது தவறை வைத்துக்கொண்டு தேவையில்லாமல் என் பெயரை டேமேஜ் செய்கிறார்கள் என்று தன் பக்கமுள்ள நியாயத்தை எடுத்து வைக்கிறார் ஸ்ரீதிவ்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி