செய்திகள்,திரையுலகம் ‘ஐ’ திரைப்படம் நவம்பரில் வந்து விடுமா!…

‘ஐ’ திரைப்படம் நவம்பரில் வந்து விடுமா!…

‘ஐ’ திரைப்படம் நவம்பரில் வந்து விடுமா!… post thumbnail image
சென்னை:-‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டிற்கு முன்னதாகவே அந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போதுதான் படத்தின் டப்பிங் பணிகள் தமிழில் முடிந்து மற்ற மொழிகளுக்கும் நடந்து வருகிறது. ஏ.ஆர். ரகுமானும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் பணியாற்றி வருகிறார். இறுதிக்கட்டப் பணிகள் முன்னரே திட்டமிட்டபடி நடைபெறாமல் போனதுதான் படத்தின் தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள்.

தற்போது விக்ரமே, தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் சொந்தக் குரலிலேயே டப்பிங் கொடுக்கப் போகிறாராம். பெரிய படம் என்பதால் ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்தாக வேண்டும். அதனால் மற்ற மொழி வேலைகள் முடியாமல் தமிழில் மட்டும் முடிந்தாலும் உடனே படத்தை ரிலீஸ் செய்யாமல், அனைத்து மொழிகளிலும் ஒன்றாக ரிலீஸ் செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம். இதற்கு முன்னர் ‘ஐ’ படத்தை 20000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று சொன்ன தயாரிப்பாளர் தற்போது அதற்கு மேலும் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது என்கிறாராம். தீபாவளிக்கு ‘கத்தி, பூஜை’ படங்கள் மட்டுமே வெளிவர உள்ள நிலையில் நவம்பரில் ‘உத்தம வில்லன்’, ‘காவியத் தலைவன்’ ஆகிய படங்களும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ‘ஐ’ படம் நவம்பர் கடைசி வாரத்தில் வெளிவந்தால் அடுத்த பத்து நாட்களுக்குள் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘லிங்கா’ படம் டிசம்பர் 12ம் தேதி வந்து விடும்.

எனவே, ‘ஐ’ படமும் ‘லிங்கா’ படமும் நெருக்கடிக்குள்ளாகும். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக ஷங்கர் உள்ளதால் இருவரின் படங்களும் மோதிக் கொள்ள வாய்ப்பில்லை என்கிறார்கள் திரையுலகினர். ரஜினிகாந்த் படம் வருகிறதென்றாலே யாருமே மற்ற படங்களை வாங்கவோ, திரையிடவோ முன் வர மாட்டார்கள். அப்படியிருக்க ‘ஐ’ படத்தை மட்டும் ‘லிங்கா’ வெளியீட்டிற்கு பத்து நாட்கள் முன்னதாக திரையிடுவது நடக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். அப்படியென்றால் ‘ஐ’ படம் மேலும் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆக, இனி ‘ஐ’ படத்தின் வெளியீடு ‘லிங்கா’ படத்தின் வெளியீட்டைப் பொறுத்துதான் இருக்க முடியும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி