செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் 33 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற முதியவர்!…

33 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற முதியவர்!…

33 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற முதியவர்!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவை சேர்ந்தவர் லார்ரி ஹெஸ்டர் (66). இவர் தனது 30வது வயதில் கண்பார்வையை இழந்தார். அப்போது அவரை தாக்கிய நோய் கண்பார்வையை பறித்தது.அன்று முதல் அவர் இருளிலேயே தனது வாழ்நாளை கழித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வாஷிங்டன் டியூக் கண் மையத்தில் ‘பயோனிக் ஐ’ என்ற செயற்கை கண் பொருத்தப்பட்டது.

அதில் வயர்லெஸ் தொழில் நுட்பம் மூலம் கண்களில் உணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. கண் கண்ணாடிகள் வழியாக கேமரா மூலம் வெளியான வெளிச்சம் மூளைக்கு சென்று பார்வையாக வெளிப்பட்டது.
அதன் மூலம் அவர் 33 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 1ம் தேதி தனது பார்வையை மீண்டும் பெற்றார். பால் ஹான் என்ற நிபுணர் இந்த தீவிர முயற்சியை கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கினார். அமெரிக்காவில் இவரை போன்று மேலும் 6 பேர் ‘பயோனிக் ஐ’ என்ற செயற்கை கண் மூலம் பார்வை பெற்றுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி