2010ம் ஆண்டு டெல்லி இளம்பெண் கற்பழிப்பு வழக்கு: 5 பேர் குற்றவாளிகள் என அறிவிப்பு!…

விளம்பரங்கள்

புதுடெல்லி:-கடந்த 2010ம் ஆண்டு தெற்கு டெல்லியிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவரை ஐந்து பேர் கும்பல் கடத்தி சென்று கற்பழித்தது. அலுவகத்தில் பணி முடிந்த பின் தனது நண்பருடன் கடந்த 2010 ஆம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி வீடு திரும்புகையில் அப்பெண் ஐந்து பேர் கும்பலால் கடத்தப்பட்டார். மங்கோல்புரிக்கு அப்பெண்ணைக் கடத்தி சென்ற அக்கும்பல் அங்கு வைத்து அவரை கற்பழித்தது. பின்னர் அப்பெண்ணை அப்பகுதியிலுள்ள சாலையில் வீசிவிட்டு சென்றது.

இது தொடர்பான வழக்கு அங்குள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற இறுதி விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் குற்றவாளிகள் என கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விரேந்தர் பட் அறிவித்தார். இதையடுத்து குற்றவாளிகளான சம்ஷாத் என்கிற குட்கான், உஸ்மான் என்கிற காலே, ஷாகித் என்கிற சோட்டா பில்லி, இக்பால் என்கிற படா பில்லி மற்றும் கமருதீன் ஆகியோருக்கு வரும் 17ம் தேதி தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.

17ம் தேதி நடைபெறும் விசாரணையின் போதும் அரசு தரப்பு எத்தனை ஆண்டு காலம் தண்டனை வழங்கவேண்டும் என்றும், அரசு தரப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பும் வாதிட உள்ளது. பின்னர் நீதிபதி தனது தீர்ப்பை வழங்குவார் என தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: