செய்திகள்,திரையுலகம் 100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய நடிகர் விஜய்!…

100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய நடிகர் விஜய்!…

100 கோடி பட்ஜெட் படத்திற்கு 200 நாட்கள் ஒதுக்கிய நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-‘கத்தி’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். பொழுதுபோக்கு படமாக உருவாகவிருக்கும் இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகவிருக்கிறது. இந்த படத்திற்காக 200 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.

கேரளாவில் நவம்பர் மாதம் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இரண்டாம் கட்டமாக மைசூரிலும், மூன்று, நான்காம் கட்ட படப்பிடிப்பை தமிழ்நாட்டிலும், வடஇந்தியாவில் டார்ஜிலிங், குலுமணாலி ஆகிய இடங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளனர். இறுதிக்கட்டப் படப்பிடிப்பை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர். விஜய்யின் பி.ஆர்.ஓ.வான பி.டி.செல்வகுமார் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி