அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் வட கொரிய அதிபரின் நிலை பற்றிய குழப்பம் முடிவுக்கு வந்தது: பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்!…

வட கொரிய அதிபரின் நிலை பற்றிய குழப்பம் முடிவுக்கு வந்தது: பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்!…

வட கொரிய அதிபரின் நிலை பற்றிய குழப்பம் முடிவுக்கு வந்தது: பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்!… post thumbnail image
பியாங்யாங்:-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 40 நாட்களாக அந்நாட்டில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறந்தது.இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் அவர் இசை நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துக் கொண்டார். அதன் பின்னர் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்காமல் போனதால் பெரும் குழுப்பம் நிலவியது.

குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அரசு தரப்பு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டபோது அவரது காலில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தது. அவர் குணமடையும் வரை அவரது சகோதரி கிம் யோ ஜோங் அதிபருக்கான பணியை கவனிப்பார் என்றும் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் கிங் ஜோங் உன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிட பணிகளை அவர் வெகுவாக பாராட்டியதாக அரசு தரப்பு கூறியுள்ளது. கைத்தடி உதவியுடன் அவர் நடந்துவரும் புகைப்பட காட்சியும் வெளியாகியுள்ளது. அப்போது அவருடன் அதிகாரிகளும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி