செய்திகள்,முதன்மை செய்திகள் இந்தியப் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஐ.நா. அமைதிப்படையின் சிறப்புக்குரிய விருது!…

இந்தியப் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஐ.நா. அமைதிப்படையின் சிறப்புக்குரிய விருது!…

இந்தியப் பெண் போலீஸ் அதிகாரிக்கு ஐ.நா. அமைதிப்படையின் சிறப்புக்குரிய விருது!… post thumbnail image
ஒட்டாவா:-தீவிரவாதம் மற்றும் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வகையில், உலகின் 69 நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் சர்வதேச நாடுகளின் ராணுவத்தினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இவற்றில், 43 நாடுகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் அமைதிப்பணியில் செயல்பட்டு வருகின்றனர்.

ஐ.நா.அமைதிப்படையில் சிறப்பாக செயலாற்றும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. சர்வதேச அளவில் அமைதிப்படையில் ஈடுபடுபவர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பாக பணியாற்றி, அமைதியை நிலைநாட்ட உதவுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.அவ்வகையில், இந்த ஆண்டின் ஐ.நா.அமைதிப்படையின் சிறந்த விருதுக்கு இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி தேவி தேர்வாகியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதிப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா.படையில் சிறப்பாக பணியாற்றி, அந்நாட்டில் அமைதி ஏற்படும் வகையிலும், அங்கு ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படவும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க உதவியமைக்காகவும் சக்தி தேவிக்கு இந்த சிறப்புக்குரிய விருது வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் வின்னிபெக் நகரில் நடைபெற்ற விழாவில் இந்த விருதினை சக்தி தேவி பெற்றுக் கொண்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி