செய்திகள்,திரையுலகம் தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…

தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…

தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?… post thumbnail image
சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் ‘கத்தி’. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, படத்தின் இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கெனவே கத்தி படம் தீபாவளியை முன்னிட்டு தான் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது தீபாவளிக்கு முன்கூட்டியே அக்டோபர் 17ம் தேதி (வெள்ளிகிழமை) படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அப்படி முன்கூட்டி ரிலீஸாகும் பட்சத்தில் படத்திற்கு மொத்தமாக பத்து நாட்கள் வசூல் கிடைக்கும் என்று திரையரங்க உரிமையாளர்கள் நம்புகின்றனர். மேலும் இது குறித்து தயாரிப்பு தரப்பும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி