செய்திகள்,திரையுலகம் தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ ஒரு காதல் கதை – கே.வி.ஆனந்த்!…

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ ஒரு காதல் கதை – கே.வி.ஆனந்த்!…

தனுஷ் நடிக்கும் ‘அனேகன்’ ஒரு காதல் கதை – கே.வி.ஆனந்த்!… post thumbnail image
சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். மேலும், நவரச நாயகன் கார்த்திக் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில், அனேகன் படத்தை பற்றிய சில தகவல்களை இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியுள்ளார். அவர் கூறும்போது, அனேகன் படம் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அனேகன் என்ற பெயர் ஒரு தனிமனிதனை குறிப்பிடுவது அல்ல. பல மனிதர்களை உள்ளடக்கியது. திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வாசகத்தை வைத்துத்தான் இப்படத்தின் தலைப்பை தேர்வு செய்துள்ளோம்.
வெவ்வேறு கால கட்டங்களில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் தனுஷும், அம்ரியா தஸ்தூரும் மூன்றுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளனர் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி