செய்திகள்,திரையுலகம் சண்டமாருதத்தில் நடிகை ஓவியா தாராள கவர்ச்சி!…

சண்டமாருதத்தில் நடிகை ஓவியா தாராள கவர்ச்சி!…

சண்டமாருதத்தில் நடிகை ஓவியா தாராள கவர்ச்சி!… post thumbnail image
சென்னை:-சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சண்டமாருதம். அவரது மனைவி ராதிகா சரத்குமார், மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்கிறார். சரத்குமாரின் கதைக்கு, க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் திரைக்கதை அமைத்துள்ளார். ஏ.வெங்கடேஷ் வசனம் எழுதி இயக்குகிறார். இதில் சரத்குமாருக்கு ஓவியா, மீரா நந்தன் என்ற இரண்டு ஜோடிகள்.

இதில் ஒரு ஜோடியான ஓவியாவுடன் சரத்குமார் பாங்காக்கில் டூயட் பாடி ஆடிவிட்டு திரும்பியிருக்கிறார். சீனியர் நடிகரான சரத்குமாருடன் ஜோடியாக நடிக்கிறீர்களே?… என்று கேட்டபோதெல்லாம், ஜோடியெல்லாம் இல்லை படம் வந்த உடன் பாருங்கள் என்று பதில் சொல்லிக் கொண்டிருந்த ஓவியா சரத்குமாருடன் படு கவர்ச்சியாக ஆடிப்பாடியிருக்கிறார். பாடல் காட்சி மட்டுமின்றி படம் முழுக்கவே ஓவியா கவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கி உள்ளார் என்கிறது பட வட்டாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி