செய்திகள்,திரையுலகம் ‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…

‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…

‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!… post thumbnail image
சென்னை:-விஜய்சமந்தா ஜோடியில் புதிதாக உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

பல தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது. இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. தமிழகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் இப்படத்தை திரையிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி