செய்திகள்,திரையுலகம் நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!…

நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!…

நடிகர் ஆர்யாவின் புது கேர்ள் பிரண்ட்!… post thumbnail image
சென்னை:-ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த படம் ‘பாஸ் என்கிற பாஸ்கரன். ராஜேஷ் இயக்கி இருந்தார். படம் ஹிட் ஆனதையடுத்து 2ம் பாகம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இதில் ஆர்யா, தமன்னா, சந்தானம் நடிப்பதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன் 2ம் பாகத்தை கைவிட்டு அதற்கு பதிலாக புதிய கதையை கையில் எடுக்கிறார் ராஜேஷ். இதில் ஆர்யா-தமன்னாவே நடிக்க உள்ளனர்.

தனது சொந்த பேனரில் தயாரிக்கிறார் ஆர்யா. குறுகிய காலத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் நடிப்பதுபற்றி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமன்னா, ஆர்யா டீம் பட ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ஆவலாக உள்ளேன். அங்கு நடக்கும் அரட்டை கச்சேரியில் எப்போது பங்கேற்கப்போகிறேன் என்ற குஷியுடன் காத்திருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

ஆர்யாவுக்கு திரிஷா, அனுஷ்கா, நயன்தாரா, எமி ஜாக்சன், அமலா பால் என ஏற்கனவே பல ஹீரோயின்கள் கேர்ள் பிரண்டாக உள்ளனர். அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து நட்பை பலப்படுத்தி வைத்திருக்கிறார் ஆர்யா. புதிய படம் மூலம் தமன்னா ஜோடி சேர்வதால் அவருக்கும் பிரியாணி விருந்து தந்து நட்பை ஆழப்படுத்த எண்ணி உள்ளார் ஆர்யா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி