செய்திகள்,திரையுலகம் ஐ படத்தின் டிரைலரை பார்த்து வியந்த நடிகர் ஷாருக்கான்!…

ஐ படத்தின் டிரைலரை பார்த்து வியந்த நடிகர் ஷாருக்கான்!…

ஐ படத்தின் டிரைலரை பார்த்து வியந்த நடிகர் ஷாருக்கான்!… post thumbnail image
சென்னை:-பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹேப்பி நியூ இயர்’. தற்போது இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார் ஷாருக்கான். இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக உருவாகியுள்ள ஐ படத்தின் டிரைலரை பார்த்த ஷாருக்கான், அப்படத்தில் ஷங்கரின் வேலையைக் கண்டு மிகவும் வியந்து போயுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஐ’ படம் வித்தியாசமான பாணியில் மிகப்பிரம்மாண்டமான அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கற்பனைக்கு எட்டாத அளவில் இருக்கிறது. இப்படத்தின் டிரைலரை பார்த்து அசந்து போனேன் என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி