செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…

பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…

பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!… post thumbnail image
இஸ்லாமாபாத்:-இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போலியோ நோய் தாக்குதல் முன்பு அதிகமாக இருந்தது. போலியோ தடுப்பூசி போடப்பட்டதற்கு பிறகு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் போலியோ நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தானிலும் போலியோ நோய் தடுப்பு மருந்தால் நோய் தாக்குதல் வேகமாக குறைந்து வந்தது.

ஆனால் போலியோ மருந்து கொடுப்பதற்கு தலிபான் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். முஸ்லிம் இன பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மேலை நாடுகள் சதி செய்து போலியோ மருந்தை கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். எனவே போலியோ மருந்து வழங்கிய ஊழியர்களை கொலை செய்தனர்.

2012ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை 60 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானின் வடக்கு பகுதிகளில் போதிய அளவிற்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அங்கு போலியோ நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை 202 பேரை போலியோ தாக்கியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி