கத்தி படத்தில் நடிகை சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி!…

விளம்பரங்கள்

சென்னை:-ரவீனா ரவி. இவர் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஸ்ரீஜா ரவியின் மகள். தமிழில் பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ள ரவீனா ரவி, தற்போது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘கத்தி’ படத்தில் சமந்தாவுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

ரவீனா ரவி, சசி இயக்கிய ‘555’ படத்தில் நடித்த மிருத்திகா மற்றும் எரிகா பெர்னாண்டஸ் இருவருக்கும் டப்பிங் பேசியிருந்தார். அதுமட்டுமில்லாமல், சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த ‘நிமிர்ந்து நில்’ படத்தில் அமலாபாலுக்கு டப்பிங் பேசியிருந்தார். தற்போது ‘கத்தி’ படத்தில் சமந்தாவுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இந்த செய்தி டுவிட்டரில் பரவலாக பரவி வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: