செய்திகள்,திரையுலகம் நடிகை எமி ஜாக்சனை சிரிக்க வைத்தால்!…

நடிகை எமி ஜாக்சனை சிரிக்க வைத்தால்!…

நடிகை எமி ஜாக்சனை சிரிக்க வைத்தால்!… post thumbnail image
சென்னை:-‘மதராச பட்டிணம்’ படத்தில் அறிமுகமான ஆங்கிலேய நடிகை எமி ஜாக்சன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக ‘ஐ’ படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது சூர்யா ஜோடியாக ‘மாஸ்’ படத்திலும் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.’ஐ’ படம் அவருக்கு நல்ல திருப்புமுனையைக் கொடுக்க வாய்ப்புள்ளது. ஆங்கிலேய நடிகையான எமி ஜாக்சன் அந்தக் கலாச்சாரத்திலேயேதான் இருப்பார். அவருடைய கிளாமரான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார்.

அது மட்டுமல்ல அடிக்கடி ஏதாவது ஒரு கருத்தையும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார். சமீபத்தில் அவரை சிரிக்க வைப்பவர்களின் பின்னால் வரத் தயார் எனச் சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். ஆண்கள் அவரை சிரிக்க வைத்து இம்ப்ரஸ் செய்யலாம். அப்படி யாராவது செய்தால் அவர்களுடன் எந்த எல்லை வேண்டுமானாலும் போகத் தயார் என்றும் சொல்லியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி