செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது: அடுத்த வாரம் அறிவிப்பு!…

டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது: அடுத்த வாரம் அறிவிப்பு!…

டீசல் விலை ரூ. 2.50 குறைகிறது: அடுத்த வாரம் அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை 1.35 அமெரிக்க டாலர் குறைந்து ஒரு பீப்பாய் 90.76 டாலராக உள்ளது. 2012–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பிறகு இப்போது தான் முதல் முறையாக விலை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணையின் விலை சரிவடைந்துள்ளதைத் தொடர்ந்து இந்தியாவில் எண்ணை நிறுவனங்களுக்கு டீசல் விற்பனையின் மூலம் லிட்டருக்கு ரூ. 1.90 லாபம் கிடைத்தது.

இதனால் டீசல் விலையை குறைக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தற்போது அரியானா, மராட்டிய சட்டசபை தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதனால் டீசல் விலையை எண்ணை நிறுவனங்கள் குறைக்கவில்லை.15ம் தேதி ஓட்டுப்பதிவு முடிந்ததும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2.50 குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. கடந்த 1ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசு குறைக்கப்பட்டது. வருகிற 15ம் தேதிக்குப்பின் டீசல் விலையும் குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி