‘ஆண்’ நடிகை கார்த்திகா…’பெண்’ நடிகர் நரேஷ்!…

விளம்பரங்கள்

சென்னை:-தெலுங்குத் திரையுலகில் சமீபத்தில் வெளியான ‘பிரதர் ஆப் பொம்மலி’ என்ற படத்தின் போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரேஷ், கார்த்திகா, மோனல் கஜ்ஜார் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை சின்னி இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது படத்தின் போஸ்டர்களும் வெளியிடப்பட்டன.

அதில் இடம் பெற்ற ஒரு போஸ்டர்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் நாயகனான நரேஷ் மஸ்காரா போடுவது போலவும், நாயகியான கார்த்திகா ஷேவிங் செய்வது போலவும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. படத்தில் நரேஷும், கார்த்திகாவும் இரட்டையர்களாக நடிக்கிறார்களாம். சில தினங்களுக்கு முன் இப்படத்தில் கார்த்திகா சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தினார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த போஸ்டரை வைத்துப் பார்க்கும் போது இரட்டையர்களான நரேஷ், கார்த்திகாவில் நரேஷ் பெண் தன்மை கொண்டவர் போலவும், கார்த்திகா ஆண் தன்மை கொண்டவர் போலவும் கதாபாத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

நரேஷ், அவர் நடிக்கும் படங்களில் நகைச்சுவை கலந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு வெற்றி பெறுவது வழக்கம். அதன்படிதான் இந்தப் படத்திலும் ஒரு புதுமையான கதையில் நடித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். கார்த்திகாவின் அதிரடி ஆக்ஷனும், நரேஷின் நகைச்சுவை நடிப்பும் ரசிகர்களைக் கவரும் என்று படக்குழுவினர் இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

%d bloggers like this: