செய்திகள்,பொருளாதாரம் லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!…

லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!…

லண்டன் ஓட்டலில் ஒரு பர்கர் விலை ரூ.1.20 லட்சம்!… post thumbnail image
லண்டன்:-இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செல்சியா என்ற ஓட்டல் உள்ளது. அங்கு உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகும் ‘பர்கர்’ தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் விலை ரூ.1 லட்சத்து 20 ஆயிரம். இந்த ‘பர்கர்’ மிக விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்காக சமையல் நிபுணர்கள் 3 வாரங்கள் எடுத்துக் கொண்டனர். இதில் ‘கோபே வாஜ்யூ’ இன மாட்டிறைச்சி, ஈரான் குங்குமப்பூ, அளவிலான கொழுப்பு சத்துள்ள நியூசிலாந்து உணவு பொருட்கள் உள்ளிட்டவை கலக்கப்பட்டுள்ளன.

இந்த பர்கரில் பயன்படுத்தப்படும் பன்ரொட்டி ஜப்பானில் பிரத்யேகமான மேட்சா ரகத்தை சேர்ந்தது. இதன் மேல்பகுதி தங்க இலைகளால் வேயப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 14 வகை உணவு பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பர்கரை இலவசமாக பெற ஓட்டல் நிர்வாகம் போட்டியை அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி