செய்திகள்,திரையுலகம் சிவகார்த்திகேயன் , தனுஷ் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு!…

சிவகார்த்திகேயன் , தனுஷ் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு!…

சிவகார்த்திகேயன் , தனுஷ் வரிசையில் நடிகர் விக்ரம் பிரபு!… post thumbnail image
சென்னை:-எழில் இயக்கத்தில் ‘வெள்ளைக்கார துரை’ மற்றும் விஜய் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத படம் என இரு படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம் பிரபு. விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படத்தின் ஷூட்டிங் கொச்சியில் நடைபெற்று வருகிறது.

‘வெள்ளைக்கார துரை’ படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்நிலையில் தற்போது அடுத்த கட்டமாக எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் பேனரில் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம் பிரபு.’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்குராஜா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ படங்களைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை ரிலீஸ் செய்தது.

தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் படத்தைத் தயாரிக்கிறது. விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தை ஃபெரோஸ் என்னும் புதுமுக இயக்குநர் இயக்க உள்ளார். ஹீரோயின் மற்றும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி