செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது!…

இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது!…

இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது!… post thumbnail image
சென்னை:-சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதே சந்திரகிரகணம். சந்திரகிரகணம் முழு சந்திரகிரகணம், பகுதி சந்திரகிரகணம் ஆகிய 2 வகைப்படும். இன்று வரக்கூடியது பகுதி சந்திரகிரகணம். இந்த சந்திரகிரகணம் பற்றி சென்னை பிர்லா கோளரங்க செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியதாவது:-

இன்று வரக்கூடிய சந்திரகிரகணம் பகுதி நேர சந்திரகிரகணம். பகுதி நேர சந்திரகிரகணம் வருடத்திற்கு 3 முறையும், முழு சந்திரகிரகணம் வருடத்திற்கு ஒரு முறையும் தெரியும். இன்று வரக்கூடிய சந்திரகிரகணம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஐரோப்பியா முதலிய நாடுகளில் நன்றாக தெரியும். ஆனால் இந்தியாவில் தெரியாது. காரணம் சந்திரன் உதிக்கும் நேரத்திற்கு முன்பே சந்திரகிரகணம் முடிந்து விடுகிறது. எனவே இது வெளிநாடுகளில் தெரியும்.

சந்திரகிரகணம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணி முதல் மாலை 6.45 மணி வரை இருக்கும். இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் தெரியாத காரணத்தால் தமிழ்நாட்டிலும் சந்திரகிரகணம் தெரியாது. எனவே நாங்கள் இந்த சந்திரகிரகணத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
இவ்வாறு பி.அய்யம்பெருமாள் தெரிவித்தார்.ஆனால் சந்திரகிரகணம் காரணமாக இன்று கோவில்களில் வழிபாட்டு நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி